Thursday, June 14, 2012

வா அம்மு தயவு செய்து நீ தயவு பார்க்காதே......
இயேசுவை துன்புறுத்தியதை விட கொடுரமாய் என்னை தாக்கு
ஒரு சொட்டு ரத்தம் மிச்சம் இல்லாமல் உறிஞ்சி எடு
மேகத்தில் ஓவியம் வரைய ஆசைபடுவனின்
மேனியை குத்தி குதறு
என்னை மயக்கமடைய விடாதே
உன் உஸ்ன மூச்சை தவிர்த்து
வேறு எதாவது ஆயுதம் கொண்டு எழுப்பு
வலி தான் மருந்து
அந்த முள் கம்பியை எடுத்து முகத்தில் அறை
நரம்புக்குள் நஞ்சு செலுத்தி பற்றி எரிய வை
வழிதான் மருந்து
உனக்கு தெரியும் தானே
மின் கம்பியில் சிக்கி கருகி விழுந்த
காகத்திற்காக கதறி அழுதவன் நான் என்று

Wednesday, June 6, 2012

நான் பரிமாரபடுவதர்க்கென வெந்து கொண்டிருக்கும் கறி...
நீ எரிந்து கொண்டிருக்கும் விறகு....
கொடூர பசியுடன் காத்திருக்கிறது காதல்!!!

Monday, February 13, 2012

நாம் காதலர்கள் என யாரும் சந்தேகப்பட கூடாது 
என காதலர் தினத்தில் 
சந்திக்க வேண்டாம் என முடிவெடுத்தோம் 
அதன் பின் தான் உன் மீது இருந்த காதல் 
அம்மாவின் பின்பு ஒளிந்து கொண்டு 
கண்டுபிடி பார்க்கலாம் என விளையாடும்
குழந்தை போல் விளையாட ஆரம்பித்து இருக்கிறது ................
(2012 காதலர் தினம் 12.37 am)

Friday, December 30, 2011


கலவி முடிந்த களைப்பில் 
நகக்கீறலை  
கோலங்கலாக்க முனையும் 
தூரிகைக்காரி அவள்.......................... 

Thursday, December 29, 2011


அவள்
பட்டாம் பூச்சி பறப்பதை
பார்த்து கொன்டிருப்பாளே
தவிர ஒரு போதும்
அதை பிடித்து தர சொல்லி என்னை
சங்கடபடவைத்ததில்லை....

Saturday, January 29, 2011

நாம் விலகி கொண்டே இருக்கிறோம்
இதயம் வலிக்க வலிக்க
மிச்சம் இருக்கும் வாழ்க்கைக்கு தெரியும்
இளைப்பாறி வந்த இடங்களும்
இடம் மாறி வந்த இடங்களும்
பேசுவதற்கு நிறைய இருந்தும்
இருவரும் மௌனங்களுடன் நின்றோம்
வழிபோக்கர்களை
காமவெறி ஏற்றாத காதல்
நமக்குள்ளே பரிமாறப்பட்டு
கொண்டு இருந்ததது
மௌனங்களை தொந்தரவு செய்யாமல்
மிக நாசுக்காய் சிறிது தள்ளிவைத்து கேட்டாய்
கொஞ்ச தூரம் நடக்கலாமா? என
எங்கெங்கோ அவமானப்பட்டு கடன் வாங்கி
பண்டிகையின் விடியலில்
புது துணி எடுக்க அழைத்து போகும்
கூலிகாரனின் மகன் போல் சந்தோசத்துடன்
உன்னுடன் நடக்க ஆரம்பித்தேன்....