Monday, December 1, 2008

மனசு காத்தாடி போல

எவ்வளவு உயரம் போனாலும்

ஆடிக்கொண்டே இருக்கும்

எல்லா கதவு சன்னல்களையும்
இறுக சாத்தியிற்று இன்னும் பயமாய் இருக்கிறது
வியாதிக்கு மருந்து சாப்பிடாத அம்மாவின்
ஆழ்ந்த உறக்கம்.
பின்புறம் கிழிந்து போன டிரௌசர்
எல்லோருக்கும் தபால் பெட்டியாய் தெரிய
அவளுக்கு மட்டும் பட்டம் பூச்சியாக தெரிந்ததம்
தேக்கி இருக்கும் மழை நீரில்
விழையாடும்
குழந்தைகளுக்காக
இந்த அரசாங்கத்தை
மன்னிக்கலாம்.