Friday, December 5, 2008

தொலை துரத்தில் இருக்கும் அம்மாவிற்கு

கைபேசியில் திரும்ப திரும்ப

பேச தெரிந்த ஒரே வார்த்தை

சாப்பிட்டாயா சாமி என்பது மட்டுமே

சாப்பாட்டில் அக்காவின் உதிர்ந்த தலைமுடி

நரைத்திருந்தது:

எடுத்து போட்டு சாப்பிட முனைகையில்

கை கழுத்தை இருக்க சுற்றி

விழி பிதுங்க வைத்தது.