Monday, September 27, 2010

நிறைய குடித்து முடித்த பின்பும்
அப்படியே இருக்கிறது
துர்நினைவுகள் அடங்கிய மது கோப்பை......

Thursday, September 23, 2010

வழிகாட்டிகள் உத்தமர்கள்.
வழித்துணையாக வருபவர்களே
துரோகத்தின் மூட்டையை
சுமக்கவிட்டு பிரிகிறார்கள்....

இலையுதிர் காலத்தின்
மொட்டை மரமென இருக்கிறேன்
வேர்கள் ஆழப் பாய்ந்திருக்கிறது.....
பூமியின் மறு முனை வரை